ETV Bharat / bharat

ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்கல் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு! - கோவிட்-19 ஊரடங்கு

டெல்லி: கரோனா ஊரடங்கு காலத்தில் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்குக் கண்டிப்பாக முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

sc
sc
author img

By

Published : Apr 23, 2020, 11:21 PM IST

கரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடுமுழுவதும் வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாத ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் முழு ஊதியம் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளதெனவும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

லூதியான் ஹேண்ட் ட்டூல்ஸ் கழகம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், " தனியார் நிறுவனங்கள் வேலை செய்யாத ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வலியுறுத்தும் உத்தரவு அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குச் சமம். தனிநபரிடமிருந்து சொத்துக்களையே பறிக்கக்கூடாது என அரசியலமைப்புச் சட்டம் 300ஏ கூறுகிறது.

ஒத்துழைத்த பொருளாதாரமும் முடங்கிக்கிடக்கும், இந்த வேளையில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது முடியாத காரியம். அதுவும் வர்த்தகமே நடைபெறாமல் இருக்கும் சூழலில் சாத்தியமே இல்லை. ஊரடங்கு எப்போதும் தளர்த்தப்படும் என்பதிலும் தெளிவில்லை. எனவே, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராகப் பதியப்படும் இரண்டு பொது நல வழக்குகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மே 3ஆம் தேதிக்கு பின் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்? - அரசாணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.