குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட பொதுமக்களை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஏஐஎம்ஐஎம் கட்சிகள் துண்டுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தெல்கானா மாநிலம் வளர்ச்சி அடைய முடியும் என்று கூறிய அமைச்சர், முஸ்லிம்களுக்கு 12 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற பொய்யான வாக்குறுதியை அளித்து சிறுபாண்மையினரை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசு ஏமாற்றி வருவதாக சாடியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஆயூஷ்மான் திட்டத்தை தெலங்கானா அரசு நடைமுறைப்படுத்தாது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தெலங்கானா அரசிற்கு தேவையான நிதி கோரிக்கையை மத்திய அரசு உடனுக்கு உடன் ஏற்று செயல்பட்டுவருவதாக தெரிவித்தார்.
இதையும் பார்க்க: அகமதாபாத்-மும்பை தேஜஸ் அதிவிரைவு ரயில் தொடக்கம்