எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கொண்டுவரப்பட்ட இந்த அவசரச் சட்டத்துக்கு கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் ஒப்புதல் கொடுத்திருந்தார்.
கேரள போலீஸ் சட்டப் பிரிவு 118-ல் 118 ஏ என்ற பிரிவு புதிதாக இணைக்கப்பட்டு காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் கேரளாவில் சட்ட வரைவு இயற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உள்நோக்கத்துடன் சமுக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அல்லது அவதூறு தகவலை உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் பரப்பினால் உரிய நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கும் வண்ணம் காவல் துறையினருக்கு இந்த சட்டப் பிரிவு வரைவில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இச்சூழலில் கருத்து சுதந்திரத்தை சிதைக்கும் வண்ணம் சட்ட வரைவு உள்ளதாக பல தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மேற்கொண்ட ஆலோசனையை அடுத்து, இதனை அமல்படுத்தப்போவதில்லை என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.