உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஷாதன் ஃபராசத் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பொதுமக்களால் அணுக முடியவில்லை.
ஆகவே அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதோடு, சுகாதாரப் பணியாளர்களை மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் 4ஜி தொலைதொடர்பு சேவை அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று தெரிகிறது. ஜம்மு காஷ்மீரில் 33 பேரிடம் கோவிட்19 வைரஸ் தொற்று காணப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதோடு, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.