ETV Bharat / bharat

அமெரிக்க வாழ் இந்தியர்களை மீட்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு! - பொதுநல வழக்கு

டெல்லி: கரோனா (கோவிட்-19) வைரஸ் பிடியிலுள்ள அமெரிக்காவில், வசிக்கும் இந்தியர்களை மீட்கக் கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PIL  Supreme Court  USA  COVID-19  evacuation  அமெரிக்க வாழ் இந்தியர்களை மீட்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு  அமெரிக்க வாழ் இந்தியர்கள்  பொதுநல வழக்கு  டெல்லி உச்ச நீதிமன்றம்
PIL Supreme Court USA COVID-19 evacuation அமெரிக்க வாழ் இந்தியர்களை மீட்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பொதுநல வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றம்PIL Supreme Court USA COVID-19 evacuation அமெரிக்க வாழ் இந்தியர்களை மீட்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பொதுநல வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Apr 11, 2020, 10:33 AM IST

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர்களான விபா தத்தா மகிஜா மற்றும் காஷிஷ் அனேஜா ஆகியோர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், “அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் துன்பகரமான நிலையில் உள்ளனர். கரோனா (கோவிட்-19) வைரஸ் பிடியில் சிக்கியுள்ள அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து, அவர்கள் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

வழக்குரைஞர்கள் தனிநபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தையும் இந்த மனுவில் கூறியுள்ளனர். அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு அல்லது தாய் நாடு திரும்ப செய்தல் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே மனுதாரர்களின் பிரதான கோரிக்கை.

அமெரிக்காவில் ஐந்து லட்சத்து நான்காயிரத்து 780 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 18 ஆயிரத்து 763 ஆக உள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் 28 ஆயிரத்து 993 பேர் மீண்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்-19: சிங்கப்பூரில் 250 இந்தியர்கள் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.