ETV Bharat / bharat

கரோனாவால் பழம் விற்கும் பேராசிரியை! - சாலையில் பழ வியாபாரம்

இந்தோர்: கரோனா பரவல் காரணமாக வேலையில்லாமல் இருக்கும் பேராசிரியை ஒருவர், சாலையில் பழ வியாபாரம் செய்துவருகிறார்.

கரோனாவால் பழம் விற்கும் பேராசிரியை!
கரோனாவால் பழம் விற்கும் பேராசிரியை!
author img

By

Published : Jul 28, 2020, 8:49 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ரைசா அன்சாரி, தேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் மெட்டிரியல் சைன்ஸ் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதனால், கரோனாவிற்கு முன்னதாக ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கல்விச் சாலைகள் திறக்கப்படாதநிலையில், குடும்ப வறுமை காரணமாக தற்போது சாலைகளில் தள்ளு வண்டியில் பழங்களை விற்றுவருகிறார்.

இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் தள்ளுவண்டியை அகற்ற முற்பட்டுள்ளனர். அப்போது அலுவலர்களுடன் தன் தரப்பு நியாயத்தை ரைசா ஆங்கிலத்தில் விளக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

கரோனாவால் பழம் விற்கும் பேராசிரியை!

இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ரைசா அன்சாரி, “மாநகராட்சி அலுவலர்கள் சாலையோர வியாபாரிகளை விலங்குகள் போல் நடத்துகின்றனர். இந்த வேலை பரவாயில்லை. இது என் குடும்பத் தொழில். நான் படிக்கும் போதெல்லாம் இதைதான் செய்தேன். எந்த வேலையும் மோசமில்லை.

புற்றுநோய் மற்றும் கரோனாவிற்கு நல்ல மருந்தை அல்லது தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...ஆக்ஸிஜன் அளவை கணக்கிடுவது உயிர்களை காக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.