ETV Bharat / bharat

வந்தே பாரத் 6ஆம் கட்டத் திட்டம் குறித்து வெளியுறவுத்துறை முக்கியத் தகவல் - வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள்

வந்தே பாரத் ஆறாம் கட்டத் திட்டம், வரும் 6ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

Vande
Vande
author img

By

Published : Aug 28, 2020, 5:42 PM IST

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இது குறித்து, கடந்த மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக முக்கியத் தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதில், “ஐந்தாம் கட்ட வந்தே பாரத் திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதிவரை மொத்தம் 900 விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 22 நாடுகளிலிருந்து 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா, இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் இந்தச் சேவையை மேற்கொண்டுள்ளன. வந்தே பாரத்தின் ஆறாம் கட்டத் திட்டம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும்" எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலதீவு உள்ளிட்ட நாடுகளுடன் ஏர் பப்புல் என்ற சிறப்பு போக்குவரத்து திட்டமும் இதில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடனும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: கரோனாவை காரணம் காட்டி பிகார் தேர்தலை ஒத்திவைக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.