டெல்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கடந்த ஆறு மாத காலமாக போர்பதற்றம் நீடித்து வந்த சூழலில், இந்தியா தற்போது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுடன் இணைந்து கடற்படையை வலுவாக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு தடைகளுக்கு நடுவே, இந்தியா இந்தப் பயிற்சியை மேற்கொள்வதில் முனைப்புடன் செயல்படுவதாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோ-பசிபிக் பகுதிகளில் தொடர்ந்து சீன ராணுவம் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இது அண்டை நாடுகளுக்கிடையேயான பேசுபொருளாக மாறிவருகிறது. இந்நிலையில், இந்தியாவின் இந்த நகர்விற்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பங்கேற்கும் நாடுகளின் உறுதிப்பாட்டை இந்தப் பயிற்சி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
-
The 24th #Malabar naval exercise begins today. #DYK, the 🇺🇸 & 🇮🇳 navies held the 1st such exercise in 1992? This now-annual exercise includes Japan, and this year Australia, and reaffirms our countries’ commitment to stronger defense cooperation in the IndoPacific. #PartnersatSea pic.twitter.com/uAo5fbjcMq
— U.S. Embassy India (@USAndIndia) November 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The 24th #Malabar naval exercise begins today. #DYK, the 🇺🇸 & 🇮🇳 navies held the 1st such exercise in 1992? This now-annual exercise includes Japan, and this year Australia, and reaffirms our countries’ commitment to stronger defense cooperation in the IndoPacific. #PartnersatSea pic.twitter.com/uAo5fbjcMq
— U.S. Embassy India (@USAndIndia) November 3, 2020The 24th #Malabar naval exercise begins today. #DYK, the 🇺🇸 & 🇮🇳 navies held the 1st such exercise in 1992? This now-annual exercise includes Japan, and this year Australia, and reaffirms our countries’ commitment to stronger defense cooperation in the IndoPacific. #PartnersatSea pic.twitter.com/uAo5fbjcMq
— U.S. Embassy India (@USAndIndia) November 3, 2020
சீன ராணுவத்தின் நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா, இந்த மலபார் கடற்கரைப் பயிற்சியில் இணையவுள்ளதாக இந்தியா கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
இதையடுத்து இந்தப் பயிற்சி முதல்கட்டமாக நேற்று(நவ.03) வங்கக் கடலில் தொடங்கியது. இது வரும் ஆறாம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் அரபிக் கடல் பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த மலபார் கடல் பயிற்சியை 1992ஆம் ஆண்டு இந்திய கடற்படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து இந்தியப் பெருங்கடலில் ஆரம்பித்தனர். அதன்பிறகு இந்தப் பயிற்சியின் நிரந்தர உறுப்பினராக 2015ஆம் ஆண்டில் ஜப்பான் இணைக்கப்பட்டது.