ETV Bharat / bharat

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உச்சம் - சாமானியர்கள் அவதி! - சர்வதேச சந்தை

டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றம் மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போரின் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை இன்று ஏழாவது நாளாக தொடர்ந்து உயர்ந்துள்ளது.

petrol-diesel-prices-surge-for-7th-straight-day
author img

By

Published : Sep 23, 2019, 5:28 PM IST

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், தலைநகர் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதன்படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.91-க்கும், கொல்கத்தாவில் ரூ.76.60-க்கும், மும்பையில் ரூ.79. 57-க்கும் மற்றும் சென்னையில் ரூ.76.83-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகின்றன.

டெல்லியில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.66.93-க்கும், கொல்கத்தாவில் ரூ.69.35-க்கும், மும்பையில் ரூ.70.22-க்கும், சென்னையில் ரூ.70.76-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகின்றன.

பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆறு நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்றும் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும், பெட்ரோல், ரூ.1.88 காசுகளும், டீசல் ரூ.1.50 காசுகளும் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றம் மற்றும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தங்கம், பெட்ரோல்-டீசல் வரிசையில் வெங்காயத்தின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருப்பது சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இதையும் படிங்க...

#Marketupdate: தொடர்ந்து ஏறுமுகத்தில் இந்தியப் பங்குச்சந்தை!

Intro:Body:

News

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.