புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும் புதுச்சேரி பொறுப்பாளருமான அர்ஜுன் ராம்பால் மேகவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொருளாதார துறையில் உலக அளவில் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. மேலும் நாடு உயர வரிகள் ஏதுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்
அனைத்து பிரிவு மக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் பட்ஜெட் இது. புதுச்சேரிக்கு தேவையான தகவல் தொழில்நுட்பத் தொழிற்சாலை , ஜவுளி பூங்கா அமைப்பதற்கான அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் இருக்கிறது என்றார்
மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். அது முற்றிலும் தவறானது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியையும் எண்ணத்தில் கொண்டுதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட மாநிலத்தை குறிப்பிட வேண்டியதில்லை.
வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசு அமையும். அந்த ஆட்சி மாநில வளர்ச்சிக்கான ஆட்சியாக இருக்கும். காங்கிரஸ் திமுக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்" என்றார்.