திபெத் புத்த மதக் குரு தலாய் லாலா, கரோனா வைரஸூக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் கரோனா வைரஸ் பரவலால் நாட்டின் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்வதால் இது அரசாங்கங்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், மக்களில் வாழ்வாதாரம் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகளாவிய அளவில் ஒன்றிணைந்த நடவடிக்கையின் மூலம் இந்த நெருக்கடி மற்றும் விளைவுகளிலிருந்து மட்டுமே நாம் விடுபட முடியும். நாம் முன்னெப்போதும் இல்லாத ஒரு சவாலை சந்தித்துள்ளோம்.
இது நாம் 'ஒன்றுபடுவதற்கான அழைப்பு' என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு அரசாங்கங்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.
மேலும் பல மக்கள் வாழ்வதற்கான திறனை குறைத்துள்ளது. மக்கள் ஒரு மனித குடும்பத்தின் உறுப்பினர்களாக அவர்களை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவருக்கொருவர் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
மனிதர்களாக நாம் அனைவரும் சமம். அதே பயம், அதே நம்பிக்கைகள், அதே நிச்சயமற்ற தன்மையை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான விருப்பத்தால் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம்.
இது பகுத்தறிவு மற்றும் விஷயங்களை யதார்த்தமாகவும் தெளிவாகவும் பார்ப்பதற்கான மனித திறனை வளர்க்கிறது. பட்ட கஷ்டங்களை வாய்ப்பாக மாற்றும் திறனை நமக்குத் தருகிறது” என கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவை சமாளிக்க தயாராகிறதா தடுப்பூசி? ஐசிஎம்ஆர் முன்னாள் இயக்குனர் பிரத்யேக பேட்டி