ETV Bharat / bharat

மாற்றத்திற்காக வாக்களியுங்கள்- தேஜஷ்வி யாதவ் - பிகார் தேர்தல் நிலவரம்

பாட்னா: பிகார் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், மாநில மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மாற்றத்திற்காக வாக்களியுங்கள்- தேஜஷ்வி யாதவ்

author img

By

Published : Oct 28, 2020, 11:57 AM IST

"தேர்தல்கள் ஜனநாயகத்தின் திருவிழாக்கள். தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு மாற்றத்திற்காக பிகார் மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துமாறு நான் கூற விரும்புகிறேன்" என்று தேஜஷ்வி யாதவ் ட்விட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “கடந்த 15 ஆண்டுகளாக, மாநிலத்தை ஆட்சி செய்துவரும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருந்தது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. அவர்களால் மாநிலத்தில் ஒரு தொழிற்துறையை நிறுவ முடியவில்லை. வறுமை நீக்கப்படவில்லை, கல்வி மற்றும் சுகாதார நிலைமை மாநிலத்தில் மோசமடைந்துள்ளது.

இந்த பிகார் தேர்தலில் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை. நிதிஷ் வெள்ளம், மற்றும் மக்களின் பிற பிரச்னைகளை புறக்கணித்துவிட்டார். முதல் முறை வாக்காளர்கள் தங்களது நல்ல எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன், " என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், "நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களுடன் நிற்பதால் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த முறை வளர்ச்சி தொடர்பான பிரச்னைகளக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள், சாதிக்கு அல்ல. நாங்கள் நிச்சயமாக ஆட்சி அமைப்போம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.