புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு கம்பன் கலையரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட தியாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் வாங்கியக் கடன்களைக் கட்டியும், பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். எந்த மாநிலத்திலாவது முதலமைச்சர், அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா நடத்தியதுண்டா? நாங்கள் செய்தோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு நம் மாநிலத்தைப் பிடித்த சனிப் போகும் என்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஊக்கத்தொகை 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்ததை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்