ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 பிரிவை நீக்குவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் இன்று அறிவித்துள்ளார்.
இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த அறிவிப்பை எதிர்த்து ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மிர் மொஹமத் ஃபயாஸ், நஸிர் அஹமத் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நகலையும் கிழித்தனர்.
இதன் காரணமாக, அவர்களை மாநிலங்களவையில் இருந்து வெளியேறுமாறு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.