நாடாளுமன்ற மக்களவை குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 17ஆவது மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரான இதில், 35 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது.

குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகமாகும் மசோதாக்களின் விவரங்கள்:
- குடியுரிமை மசோதா 2019
சட்டவிரோத குடியேற்ற வரையறை
- தனி நபர் தகவல் பாதுகாப்புச் சட்டம்
கார்ப்பரேட் நிறுவனங்கள் நுகர்வோர் தரவைக் கையாளுதல் மற்றும் செயல்படுத்துதல், கட்டுப்பாடுகள் மற்றும் அபராத விதிப்பு அறிமுகம்
- மூன்றாம் பாலினத்தவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சட்டம்
- எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் தடை விதிப்பு மசோதா (தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, விநியோகம், பதுக்கல் மற்றும் விளம்பரம்)
- தொழில் துறை உறவுகள் குறியீடு மசோதா 2019
- வரி விதிப்பு சட்ட திருத்த மசோதா 2019
- நிறுவனங்கள் இரண்டாம் மசோதா 2019
- சிட்ஃபண்டு மசோதா 2019
- இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணைய மசோதா 2019
- வாடகைத் தாய் கட்டுப்பாட்டு மசோதா 2019
- ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக மசோதா 2019
'சிறப்பான முறையில் விவாதத்தை முன்னெடுங்கள்' - எம்.பி.களுக்கு பிரதமர் வேண்டுகோள்!