கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலாத் தலங்கள், வனவிலங்கு பூங்கா போன்ற பொது இடங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் உள்ள ரானாக்பூர் ஜங்கிள் சஃபாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் இயங்கிவரும் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் ஹாயாக சுற்றித்திரிகின்றனர்.
இந்நிலையில், உணவகத்தில் தனிமையில் இருந்த சிறுத்தை, மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் குட்டிகளின் உடல்நலத்தை ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள்!