ETV Bharat / bharat

காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: விசாரணை செய்யக் குழு ரெடி - காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

டெல்லி: காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேர் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்போது நடைபெற்ற அசம்பாவிதங்கள் குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Speaker
Speaker
author img

By

Published : Mar 6, 2020, 5:34 PM IST

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கியது. டெல்லி வன்முறை, கொரோனா போன்ற விவகாரங்களை முன்வைத்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கொரோனா குறித்த விவாதம் நடைபெறும்போது, ராஜஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று காகிதங்களை தூக்கி எறிந்தனர். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதீப் பந்த்யோபாத்யாய், திமுகவின் தயாநிதி மாறன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே ஆகிய ஏழு உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

இந்நிலையில், இச்சம்வங்கள் குறித்து விசாரிக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளிலிருந்தும் தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இக்குழுவின் உறுப்பினர்களாக தொடர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.