ETV Bharat / bharat

காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்கும் பாகிஸ்தான் முயற்சிக்கு பதிலடி தரப்பட்டுள்ளது - தூதர் டி.எஸ். திருமூர்த்தி

காஷ்மீர் விவகாரத்தை ஐநாவுக்கு கொண்டு சென்று அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு இந்தியா தகுந்த பதிலடி தந்துள்ளது என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தூதர் டி.எஸ். திருமூர்த்தி
தூதர் டி.எஸ். திருமூர்த்தி
author img

By

Published : Aug 5, 2020, 12:02 AM IST

காஷ்மீர் விவகாரத்தை ஐநாவுக்கு கொண்டு செல்வதன் மூலம் தனக்கு ஆதரவான சூழல் ஏற்படும் என்ற பாகிஸ்தானின் எதிர்பார்ப்புக்கு இந்தியா பதிலடி தந்துள்ளதாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 1965ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை ஒருமுறை கூட இவ்விவகாரம் குறித்து ஆலோசிக்க பாதுகாப்பு கவுன்சில் கூடவில்லை.

நடத்தப்பட்ட ரகசிய கூட்டத்தில் கூட, சீனாவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் காஷ்மீர் விவகாரம் இருநாட்டு பிரச்னை என ஒப்புக் கொண்டது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் ஒன்றும் புதிதல்ல. இதுகுறித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்று பொய்யானது.

இவ்விவகாரத்தை குறித்து ஆலோசிக்க பாதுகாப்பு கவுன்சில் கூடவில்லை. சமீபத்தில் நடைபெற்றது கூட ரகசிய கூட்டமே தவிர, அதிகாரப்பூர்வ கூட்டம் அல்ல. 1972ஆம் ஆண்டு போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளன" என்றார்.

இதையும் படிங்க: சட்டப்பிரிவு 370 நீக்கம்: காஷ்மீரின் வளர்ச்சிக்கான கதவுகளை திறந்துள்ளதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.