ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா காட், மான் கோட் மற்றும் நவுசேகரா செக்டார் ஆகிய பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல் அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இதில் இந்திய ராணுவம் தரப்பில் எவ்வித பாதிப்புகளும் இல்லை. இதேபோல் நேற்றும், (ஜூன்21) பூஞ்ச் மாவட்டத்தின் பாலக்கோட் செக்டார் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.
அதன் பின்னர் இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தாண்டு, ஜூன் 10ஆம் தேதிக்குள் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 2027 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மாதம் பூஞ்ச் மாவட்டம் ராவ் பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் அவசரக் கூட்டம்: எடியூரப்பா அழைப்பு!