குஜராத் மாநிலம் ஓகாவில் லத்திபாயின் குடும்பத்தில் ஹுசேனி 3, அல் வசீலா சபின் ஆகிய இரண்டு மீன்பிடிப் படகுகள் உள்ளன. கடந்த 6ஆம் தேதியன்று ஹுசேனி 3 இல் ஒன்பது பேர், அல் வசீலா சபின் படகில் 11 பேர் என மொத்தம் 20 பேர் ஓகாவிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். தற்போதுவரை படகுகள் கரைக்குத் திரும்பவில்லை.
இது குறித்து லத்தீபாய் குடும்பத்தினர் கூறுகையில், "இரு படகுகளும், பணியாளர்களும் பாகிஸ்தான் கடற்படையால் கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சமாக உள்ளது. மேலும், சர்வதேச கடல் எல்லைக் கோடு வழியாக இந்தியப் பகுதியில்தான் மீன்பிடித்திருப்பார்களே தவிர அவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல வாய்ப்பே இல்லை" எனத் தெரிவித்தனர்.
இது குறித்து ஓகா மீன்வள அலுவலர்களுக்கு எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. குஜராத்தில் ஆயிரத்து 600 கிலோமீட்டர் நீளமுள்ள மிக நீண்ட கடற்கரை உள்ளது. கடற்கரையோர மீனவர்கள் மீன்பிடிக்கும்போது அண்டை நாட்டின் எல்லப்பகுதியில் சிக்கித் தவிக்கும் இடரில் உள்ளனர். இதற்குமுன் மீன்பிடி படகுகளையும், குஜராத்தைச் சேர்ந்த மீனவர்களையும் பாகிஸ்தான் கடற்படை கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா தொற்று - அகமதாபாத்தில் ஊரடங்கு நீட்டிப்பு