ETV Bharat / bharat

71 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் நிஜாம் சந்ததிக்கும் ஆதரவாகத் தீர்ப்பளித்த இங்கிலாந்து! - 7ஆவது நிஜாம்

லண்டன்: 71 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து உயர் நீதிமன்றம் இந்தியாவுக்கும் ஹைதராபாத்தின் கடைசி நிஜாமின் சந்ததியினருக்கும் ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.

ஒஸ்மான் அலி கான்
author img

By

Published : Oct 3, 2019, 3:30 AM IST

Updated : Oct 3, 2019, 8:26 AM IST

ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் லண்டனில் உள்ள தேசிய வெஸ்ட்மின்ஸ்டர் வங்கியில் உள்ள ஹைதராபாத் மாநில வங்கி கணக்கிலிருந்து, அதே வங்கியில் உள்ள மற்றொரு கணக்கிற்கு ஒரு மில்லியன் டாலரை மாற்றியதிலிருந்து பிரச்னை தொடங்கியது.

லண்டன் வங்கியிலிருந்த இரண்டாவது கணக்கை பாகிஸ்தானின் உயர் ஆணையாளராக இருந்த ஹபீப் இப்ராஹிம் என்பவர் வைத்திருந்தார். நிஜாமின் நிதி அமைச்சர்தான் அவர் கணக்கில் கையொப்பமிட்டவர் என்றாலும், நிஜாமின் அனுமதியின்றி நிதியை திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ அவருக்கு அதிகாரம் இல்லாமலிருந்தது. மேலும் நிதியை மறு பரிமாற்றம் செய்ய நிஜாமின் அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படாமல் போனது.

பின்னர் நிஜாமின் சந்ததியினர் 1963இல் ஒரு அறக்கட்டளை அமைக்க தங்களது தாத்தாவால் பரிசாக வழங்கப்பட்ட நிதிதான் அது என கூறினார்கள். ஆனால் பாகிஸ்தானோ 1948இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, ஹைதராபாத்திற்கு ஆயுதங்களை வழங்குவதற்காக அப்பணம் எடுக்கப்பட்டதாகக் கூறியது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இங்கிலாந்து நீதிமன்றம் இந்தியாவுக்கும், நிஜாமின் சந்ததியினருக்கும் ஆதரவாகத் தீர்ப்பை வழங்கியது.

இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு சவுதி ஆதரவு?

Last Updated : Oct 3, 2019, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.