பெங்களூரு:- பாகிஸ்தான் வாழ்க என்று கூறி சிறையில் வாடும் மூன்று மாணவர்களின் பிணை மீதான விசாரணையை கர்நாடக நீதிமன்றம் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது
பாசித் ஆஷிக் சோஃபி, தலிப் மஜீத், ஆமிர் மொஹைதீன்வானி ஆகிய மூவர் தான் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேலாக சிறையில் வாடிவருகின்றனர்.
இவர்கள் சமர்பித்த மனுவின் மீதான இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, “மாணவர்கள் மீது தேச துரோக குற்றம் செய்ததற்கான எந்த முகாந்திர காரணங்களும் இல்லை” என்று கூறினர்.
200 பேருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய துணை முதலமைச்சர்!
இதனையடுத்து அரசு வழக்கறிஞர், “சிறைச்சாலையில் இருக்கும்போதே இவர்களுக்கு பயின்றதுக்கான பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கோரினர்.
அதற்கு பதிலளித்த நீதிபதி, “அது குறித்த பின்னணி சரிபார்ப்பு நடவடிக்கைகளை அரசு அலுவலர்கள் மேற்கொள்வர். மேலும், இந்த வழக்கின் மீதான மறுவிசாரணை எப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று கூறினர்.