மத்திய உள்துறை இணையமைச்சர் கிசான் ரெட்டியின் பிரத்தியேக இணையதளமான kishanreddy.com-ஐ பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இந்த சம்பவம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அரங்கேறியுள்ளது.
அவரது இணையத்தளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்கள், காஷ்மீரை விடுதலை, பாகிஸ்தான் ஆதரவு கருத்து, இந்திய அரசுக்கு எச்சரிக்கை உள்ளிட்ட வாசகங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த செயலுக்கு அவர்களே முன்வந்து பொறுப்பேற்றுள்ளனர். இச்சம்பவம் அரங்கேறி பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை அது சீர் செய்யப்படவில்லை. இதை மத்திய அமைச்சரின் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சீன முதலீட்டாளர்களுக்கு இனி முக்கியத்துவம் - இம்ரான் கான் அதிரடி முடிவு