போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி-வருகிறது. கடந்த திங்கள் முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவருகிறது.
இன்று காலையும் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், ”இன்று காலை 9.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர், பூஞ்ச் மாவட்ட கிர்னி, தேக்வார் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
சிறிய ரக ஆயுதங்கள், ஷெல் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும்” என்றார்.
நேற்று நாட்டின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் சரியான பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!