காஷ்மீரின் எல்லை பகுதியான ராஜோரி மாவட்டத்தில் நேற்று இரவு பாகிஸ்தானிலிருந்து வந்த ரகசிசய ட்ரோனில் ஆயுதங்களும், பணக்கட்டுகளும் இருந்துள்ளன. இதுதொடர்பாக தகவலறிந்து விரைந்த காவல் துறையினரும், ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் அமைப்பினரும் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய பைகளுடன் வந்த மூன்று நபர்களை விசாரித்ததில், லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்த, மூவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாகிஸ்தானில் வந்த ட்ரோனிலிருந்த இரண்டு ஏகே-56 துப்பாக்கிகள், 6 ஏகே துப்பாக்கி மேகஸைன்கள், 180 குண்டுகள், 2 சீன கைத்துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
இந்திய நாட்டு எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது ஆயுதங்களை சப்ளை செய்வதற்கு நூதன முறையை பாகிஸ்தான் கையாண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமான கண்காணிப்பில் களமிறங்கியுள்ளனர்.