இந்தியா - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக இரு நாடுகளிலும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இச்சமயத்தில் சீனா படையினருக்கு கூடுதல் பலமாக பாகிஸ்தான் அரசு எல்லையில் 20 ஆயிரம் வீரர்களை நிறுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ படை வெளியிட்டுள்ள அறிக்கையில், " எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 20 ஆயிரம் வீரர்களை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக பரவும் தகவலில் உண்மையில்லை.
அதே போல், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள ஸ்கோடு (Skardu) விமானநிலையத்தை சீனா பயன்படுத்துகிறது. பாகிஸ்தானில் சீன படைகள் இருப்பதை கடுமையாக மறுக்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.