ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்திவந்தனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் பள்ளிக்கு அருகே பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தி சில மாணவர்களை பிடித்துவைத்தனர். பின்னர், பாதுகாப்புப் படையினர் சரியான பதிலடி அளித்து மாணவர்களை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மச்சில் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி ஒருவர் உயிரிழந்தார், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையும் படிங்க : காஷ்மீரில் மேற்குவங்க தொழிலாளர்கள் 5 பேர் சுட்டுக்கொலை!