இமாச்சலப் பிரதேசம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த வண்ணம் பூசும் பணி செய்துவரும் இரு குழந்தைகளின் தந்தையான சஞ்சீவ் குமார் என்பவருக்கு பயணத்தின்போது வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் இரண்டரை கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரிலிருந்து தன் ஊருக்குத் திரும்பிகொண்டிருந்தபோது, நங்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இரண்டு லாட்டரிச் சீட்டுகள் 1000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார் குமார். தனது குடும்பத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையில் இருந்ததாகக் கூறும் குமார், தனக்குக் கிடைத்த 2.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை தன் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காகவும் அவர்களின் எதிர்காலத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
லாட்டரி சீட்டு விற்பனை அமோகம்: தடுத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை
நவம்பர் 1ஆம் தேதி லூதியானாவில்தான் இந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடந்துள்ளது. பரிசுத் தொகையைப் பெறுவதற்காக, குமார் தற்போது தனது அடையாள ஆதாரங்களைப் பஞ்சாப் அரசின் லாட்டரி துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.