கரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் நாடு முழுவதும் நாளை (ஜன- 16) தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி ஏற்கனவே ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடு முழுவதும் நாளை காலை 10.30 மணிக்கு கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தடுப்பூசி விநியோகத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,006 மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.