மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் சுமார் 90 சதவிகிதம் பேர் வாக்களிக்கவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1.5 கோடி புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதிப் பெற்றுள்ளனர். இவர்களிடம்"பவர் ஆப் 18" என்ற தலைப்பில் ட்விட்டரில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் 10ல் 7 வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான விவாதங்களில் பங்கெடுத்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ட்விட்டரில் அரசு திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசுவதற்கு 54.6 சதவிகிதம் பேர் ஆதரவு தருவதாகவும், 54.4 சதவிகிதம் பேர் கேள்வி கேட்க மட்டுமே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 80 சதவிகிதம் பேர் நாட்டில் என்ன நிகழ்வு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவே சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.