பயனாளிகளின் தரவுகளின் பாதுகாப்பு அடிப்படையில், 52 சீன செயலிகள் பாதுகாப்பற்றவை என இந்தியப் புலனாய்வு அமைப்புகள் (Indian Intelligence Agencies) எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும், சீனாவின் இந்த 52 செயலிகளை மக்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது இச்செயலிகளை தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிடம் இந்த அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்த அமைப்புகளின் கூற்றுப்படி, 52 சீன செயலிகளின் பட்டியலில் டிக்-டாக், ஜூம், ஜெண்டர், ஷேர் இட், க்ளீன்-மாஸ்டர், யுசி ப்ரௌசர் போன்றவையும் அடங்கும். முன்னதாக லடாக்கில் இரு நாடுகளுக்கும் (இந்தியா-சீனா) இடையிலான எல்லைப் பதட்டம் காரணமாக சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்தியாவின் உளவுத்துறை அலுவலர்களால் பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்ட 52 சீன செயலிகளில் சில:
டிக்டாக் (Tik-tok), வால்ட்-ஹைடு (Vault Hide), விகோ வீடியோ (Vigo Video), பிகோ லைவ் (Bigo Live), வெய்போ (Weibo), வி-சாட் (WeChat), ஷேர்-இட் (SHAREit), யுசி நியூஸ் (UC News), யுசி பிரவுசர் (UC Browser), பியூட்டி பிளஸ் (BeautyPlus),
ஜென்டர்(Xender), கிளப் ஃபேக்டரி (ClubFactory), ஹலோ(Helo), லைக்(LIKE), கவாய்(Kwai), ரோம்வீ(ROMWE), ஷெய்ன்(SHEIN), நியூஸ் டாக்(NewsDog), போட்டோ வொன்டர்(Photo Wonder), ஏபியூஎஸ் பிரவுசர்(APUS Browser)
இதையும் படிங்க: அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கரோனா? - பற்றவைத்த ஸ்டாலினின் ட்வீட்!