ETV Bharat / bharat

கரோனா: 25 ஆயிரம் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன - ஜிதேந்திர சிங் - கரோனா வைரஸ் குறைகள்

கரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக கடந்த 20 நாள்களில் மட்டும் மத்திய அரசின் இணையதள சேவை மூலமாக இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Over 25,000 COVID-19 related grievances addressed through Portal: Centre

author img

By

Published : Apr 21, 2020, 11:57 AM IST

இது குறித்து அவர் கூறுகையில், "கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் இத்தொற்று தொடர்பாக குறைகளை தீர்க்கும் மத்திய அரசின் இணையதள சேவைக்கு நாடு முழுவதும் பொதுமக்களால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிவரை 332 கோவிட் 19 தொடர்பான குறைகளை மக்கள் பதிவு செய்திருந்த நிலையில், ஏப்ரல் 16 ஆம் தேதிக்குள் இதன் எண்ணிக்கை 5,566ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கடந்த 20 நாள்களில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. மக்கள் தெரிவிக்கும் புகார்களை ஒன்றரை நாள்களிலேயே தீர்த்து வைத்துள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் துறைக்கு பாராட்டுகிறேன். இதனிடையே, கோவிட் -19 தொடர்பாக சுமார் 14,982 குறைகள் வெவ்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மற்ற குறைகள் நிவர்த்தி செய்யவதற்காக பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குறிப்பாக வெளிமாநில ஊழியர்கள், சுகாதார கட்டமைப்பு, தனிமைப்படுத்துதல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், வங்கி, நிதித்துறை பிரச்னைகள், ஊழியர்களின் ஊதியம், பள்ளி, உயர் கல்வி தொடர்பான பிரச்னைகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்வதில்தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: ரமலான்போது வீட்டிலேயே வழிபாடு செய்யுங்கள் - தப்லிக் ஜமாஅத் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.