கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, கடந்த மாதம் இந்தியக் கப்பற்படை 'ஆப்ரேஷன் சமுத்திரா சேது' என்ற திட்டத்தைத் தொடங்கி அதனைப் பல கட்டங்களாகச் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த திட்டத்தின் மூன்றாவது கட்டமாக மாலத்தீவில் சிக்கித் தவித்து வந்த 198 இந்தியர்களுடன் ஐஎன்எஸ் ஐராவட் கப்பல் நேற்று தூத்துக்குடிக்கு தன் பயணத்தை தொடங்கியதாகக் கப்பற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மே 8 முதல் 12ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மாலத்தீவிலிருந்து 900 பேரும், அதன் பிறகு தொடங்கிய இரண்டாம் கட்டத்தில் இலங்கை, மாலத்தீவிலிருந்து தலா 700 பேரும் மீட்கப்பட்டனர்.
கோவிட்-19 பெருந்தொற்றை கருத்தில் கொண்டு சர்வதேச விமான, கப்பல் போக்குவரத்து இந்தியாவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 4.1 லட்சம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : காஷ்மீரில் 24 மணி நேரத்தில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!