ETV Bharat / bharat

'விண்வெளித்துறையில் தனியார் பங்களித்தால் நாடு வளர்ச்சி காணும்' - இஸ்ரோ தலைவர் கே.சிவன் - விண்வெளி துறை தனியார் பங்களிப்பை வரவேற்ற இஸ்ரோ தலைவர் கே சிவன்

பெங்களூரு : விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வரவேற்றுப் பேசியுள்ளார்.

k sivan
k sivan
author img

By

Published : Jun 25, 2020, 4:46 PM IST

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசுகையில், "விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த நாட்டின் ஆற்றலைக் கொண்டு, விண்வெளி தொழில் நுட்பங்களின் திறனைக் கூட்டமுடியும்.

இது விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சர்வதேச விண்வெளித் துறையில் இந்தியாவை முக்கிய நாடாக உருவெடுக்கச் செய்ய வழிவகுக்கும்.

சமுதாய-பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள விண்வெளித்துறை சீர்திருத்தங்களின் மூலம், விண்வெளித்துறை சார்ந்த சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படும்.

இதுகுறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க மத்திய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சியை ஊக்கவிக்கும்" என்றார்.

விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு நேற்று(ஜூன் 24) ஒப்புதல் வழங்கியது.

இந்தியாவை தற்சார்பு நாடாக உருவெடுக்கச் செய்யும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண்க - பிரிட்டன் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.