ETV Bharat / bharat

மத்திய அரசின் வெற்றித் திட்டங்களை வாசித்தால் நேரம் போதாது - ஓ.பி. ரவீந்திரநாத் பேச்சு - Theni MP OP Ravindranath speech in Parliament

அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பேசும்போது, மத்திய அரசின் வெற்றித் திட்டங்களை வாசித்தால் நேரம் போதாது என்பதைக் குறிப்பிட்டார்.

Ravindranath
Ravindranath
author img

By

Published : Feb 10, 2021, 2:15 PM IST

பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் நன்றியுரை குறித்து அதிமுக தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் உரையாற்றினார்.

அப்போது அவர், "இந்தாண்டு குடியரசுத் தலைவர் உரை மேற்கொண்ட காலகட்டமானது நாடு கோவிட்-19 என்ற பெருந்தொற்றை எதிர்கொள்ளும் சவாலான சூழலை சந்தித்துவருகிறது. அதேவேளை, உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தை இந்தியா மேற்கொண்டுவருகிறது.

இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் பொருளாதாரச் சிறப்புச் சலுகையை அறிவித்தது. குடியரசுத் தலைவரின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த சாதனைப் பட்டியலை வாசித்தால் நேரம் போதாது.

எனவே, முத்து போன்ற முக்கியத் திட்டங்களான பிரதான் மந்திரி கரீப் கல்யான் யோஜ்னா, போஷான் திட்டம், பிட் இந்தியா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், கேலோ இந்தியா திட்டம், கிராமப்புறச் சாலைத் திட்டம், இந்திர தனுஷ் திட்டம் மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஓ.பி. ரவீந்திரநாத் பேச்சு

கடந்த ஓராண்டில் மட்டும் விவசாயிகளுக்கு நேரடியாக ரூ.1.13 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. இந்நிலையில், மழை பாதிப்பு காரணமாக நெருக்கடியில் தவிக்கும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு நிதியுதவியை மத்திய அரசு விரைவாக வழங்கிட வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: 'தடுப்பூசிக்கு முன்பதிவு' முன்களப் பணியாளர்களுக்கு பிப்.20 வரை காலக்கெடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.