ETV Bharat / bharat

'கணவரின் பணத்தில் முதல் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு'- மும்பை உயர் நீதிமன்றம்!

author img

By

Published : Aug 25, 2020, 9:40 PM IST

கணவரின் பணத்தில் முதல் மனைவிக்கு மட்டுமே சட்ட உரிமை உண்டு என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Bombay High Court Aurangabad bench Madhav Jamdar Hindu Marriage Act Dharavi Mumbai Maharashtra Wife Husband Money Claim இரண்டாவது மனைவி கணவரின் பணத்தில் முதல் மனைவிக்கு மட்டுமே உரிமை கோவிட்-19 கரோனா வைரஸ் மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: “ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, இருவரும் அவரது பணத்திற்கு உரிமை கோரினால், சட்டப்படி முதல் மனைவிக்கு மட்டுமே கணவரின் பணத்தில் உரிமை உண்டு” என்று மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆக.25) கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ரயில்வே போலீஸ் படையில் உதவி துணை ஆய்வாளராக சுரேஷ் ஹதங்கர் என்பவர் பணியாற்றிவந்தார். இவரது, இரண்டாவது மனைவி தாக்கல் செய்த மனுவை நீதிபதி கதவல்லா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அந்த மனுவில் சுரேஷின் இரண்டாவது மனைவி, “கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பணியில் இருக்கும் போது, இறக்கும் காவலர்களுக்கு ரூ.65 லட்சம் மாநில அரசு இழப்பீடு வழங்குகிறது.

ஆகவே தனது கணவரின் இறப்பினால் கிடைத்த தொகையில் தனக்கும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி சுரேஷின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் ஷ்ரத்தா மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிபதிகள் இன்று அறிவித்தனர்.

அப்போது, “கணவரின் பணத்தில் இரண்டாவது மனைவிக்கு எதுவும் கிடைக்காது என்று சட்டம் கூறுகிறது. ஆனால் இரண்டாவது மனைவியின் மகள், முதல் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு பணத்திற்கு உரிமை உண்டு” என்று தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கில் சுரேஷின் முதல் மனைவி தனது கணவருக்கு இரண்டாவது மனைவி இருப்பதும் அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதும் தனக்கு தெரியாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சுரேஷிக்கு முதல் திருமணம் 1992ஆம் ஆண்டு நடந்துள்ளது. அதன்பின்னர் 1998ஆம் ஆண்டில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த இரண்டு திருமணங்களும், திருமண பதிவேட்டில் முறைப்படி பதியப்பட்டதாக சுரேஷின் இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மனைவிக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த பொறியாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.