கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த சூழலிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கக் கூடாது என்பதால், பல பள்ளிகள் ஆன் லைனில் கல்வி கற்றுக் கொடுத்து வருகின்றனர். ஆனால் ஆன் லைனில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களுக்கு, சில சாதகங்களும், சில பாதகங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆன் லைன் கல்வி முறையைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மாணவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அலைபேசி, டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றைக் கொண்டு இணையவழியாக மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தங்கள் வீட்டிலிருந்து வகுப்புகளை கவனிக்கும்போது, வகுப்புகளைப் பாதுகாப்பாகப் பார்ப்பதில் பல சிக்கல்கள் வளர்ந்து வருகின்றன.
சில மாணவர்கள் இணைய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே மாணவர்களின் ஆன் லைன் கல்விக்காக பள்ளிகள் சார்பில் தொடங்கப்பட்ட சர்வர்களிலும், செயலிகளிலும் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுகிறது.
இதனால் ஆன் லைன் வகுப்புகளின்போது ஆபாச வீடியோக்கள், திகில் படங்கள், தேவையில்லாத கிராஃபிக்ஸ் ஆகியவை மூலம் திசை திருப்பப்படுகிறது. இதுகுறித்து பல மாநிலங்களிலும் காவல் துறையினரிடம் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சைபர் பாதுகாப்பு நிபுணர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: குற்றம் - 02: இந்தியாவை அச்சுறுத்தும் பிஷிங் - தப்பிக்க வழிகள் என்ன?