ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் தாடிபத்ரி என்ற இடத்தில் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த பிரமுகர் சித்தா பாஸ்கர் ரெட்டியை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாகத் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.