மேற்கு வங்கம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்திவருகிறது. தமிழ்நாட்டைப் போன்று வருகின்ற மே மாதத்தில் அங்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலையொட்டி பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறது.
அந்தவகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயலை எதிர்த்து பாஜக இளைஞரணி (பாஜக யுவ மோர்ச்சா) சார்பில் உத்தர்கன்யா மார்ச் என்ற பெயரில் அணிவகுப்பு நடத்த இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சிலிகுரியில் பாஜகவினர் இன்று (டிச. 07) ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திரிணாமுல் காங்கிரசின் தவறான செயல்திட்டம், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாகக் கூறி கோஷம் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் உலன் ராய் என்பவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் மேற்குவங்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் காவல் துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துவருகிறார்.
இதையும் படிங்க: ராகுல், பிரியங்கா கலப்பினம் என்று சித்த ராமையா ஒப்புக்கொள்கிறாரா? ஈஸ்வரப்பா கேள்வி!