ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! - கரோனா வைரஸ்

கரோனா வைரசால் இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!

author img

By

Published : Mar 20, 2020, 12:21 PM IST

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் கோவிட் 19 வைரசின் தாக்கம், அதிகரித்துவருகிறது.

மேலும் இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வைரஸ் தொற்றைக் குறைக்க பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்று இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 206 பேர் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய ராணுவ வீரருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.