பிகார் மாநிலம், கிஷன்கஞ்ச் மாவட்டம் இந்தியா - நேபாள எல்லை அருகே நேற்று இச்சம்பவம் நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "காயமடைந்தவர் ஜிதேந்திர குமார் சிங் (25), அவரது இரண்டு நண்பர்களான அங்கித் குமார் சிங், குல்ஷன் குமார் சிங் ஆகியோருடன் இந்தோ-நேபாள எல்லையில் உள்ள மாஃபி டோலா அருகே கிராமத்திற்கு வெளியே உள்ள பண்ணைக்கு இரவு 7.30 மணியளவில் தங்கள் கால்நடைகளை தேடிச் சென்றுள்ளனர். அப்போது, மூன்று இந்தியர்கள் மீது நேபாள காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், ஜிதேந்திர குமார் சிங் காயமடைந்தார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனக் கூறினார்
கிஷன்கஞ்ச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குமார் ஆஷிஷ் கூறுகையில், “நாங்கள் நேபாள காவல் துறையினருடன் பேசினோம். இந்த விவகாரம் தற்போதுவரை அமைதியான முறையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.
முன்னதாக ஜூன் 12ஆம் தேதி, பிகாரின் சீதாமாரி மாவட்டத்தில் இந்தியா-நேபாள எல்லையில் உள்ள இந்தியர்கள் மீது நேபாள பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்திய பிராந்தியத்திற்கும் லிபுலேக், கலாபானி, லிம்பியாதுராவின் பகுதிகளையும் அதன் சொந்தமாகக் காட்டும் வரைபடத்தை வெளியிட்ட பின்னர் இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் சிதைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா , ஜிடிபி, சீன விவகாரம்... மோடியின் பொய் பட்டியல்