ETV Bharat / bharat

பாம்பு கடித்து இறந்தவருக்கு உயிர் கொடுக்க வந்த மாந்திரீகவாதி - உயிழந்த வாலிபரை காப்பாற்ற வந்த மாந்திரீகவாதி

புவனேஷ்வர்: பாம்பு கடித்ததால் உயிரிழந்த இளைஞரை உயிர் பிழைக்கச்செய்வதற்காக அவரது உறவினர்கள் மாந்திரீகவாதி ஒருவரை மருத்துவமனையின் பிணவறைக்கு அழைத்துவந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

occultist
author img

By

Published : Jul 26, 2019, 10:31 PM IST

ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தின் கேஷிங்கா அருகே அமைந்துள்ள டமர்பாஹெல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ் கோபால்(21). கடந்த புதன்கிழமையன்று இரவு சதீஸை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞரை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு உரிய மருந்துகள் இல்லாததால், அந்த இளைஞரை மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த சதீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது. எனினும் மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை கொண்ட சதீஸின் குடும்பத்தினர் உயிரிழந்த இளைஞரை மீண்டும் உயிர்பெறச் செய்யும் நோக்கில் ஒரு மாந்தீரிகவாதியை அழைத்துவந்துள்ளனர். பின்னர் எந்தவொரு அனுமதியின்றியும் பிணவறைக்குள் சென்ற மாந்திரீகவாதி, உயிரிழந்த இளைஞரின் சடலத்துடன் சுமார் மூன்று மணிநேரம் மாந்திரீகம் செய்துள்ளார்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் மாந்திரீகவாதியையும், அவரது உறவினர்களையும் பிணவறையில் இருந்து வெளியேற்றினர். அதன் பிறகு உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/bereaved-kin-ropes-in-sorcerer-to-resurrect-dead-boy-in-odisha20190726064435/

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.