ETV Bharat / bharat

ஒடிசாவில் ஆன்லைன் மது விற்பனை தொடக்கம்! - home delivery liquor 50 percent covid fee

புவனேஷ்வர்: வீடுகளுக்கு சென்று மதுபானங்களை டெலிவரி செய்யும் வகையிலான இணையதளத்தினை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

mathu
mathu
author img

By

Published : May 24, 2020, 4:02 PM IST

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது மே 31ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தத் தளர்வுகளின் அடிப்படையில் மாநிலங்கள் மதுபானக் கடைகளைத் திறந்தன. வெகுநாள்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் தகுந்த இடைவெளியின்றி கூட்டம் அலைமோதியது.

இதனை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று வழங்கும் ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. அதன்படி, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஆன்லைன் மது விற்பனையைத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து ஒடிசாவில்,அம்மாநில அரசே பிரத்யேக இணையதளத்தை (https://osbc.co.in/) உருவாக்கி மது விற்பனையை தொடங்கியுள்ளது.

மது பிரியர்கள் இணையதளத்தில் விருப்பமான மது வகையை தேர்தெடுத்து, ஆன்லைனில் பணம் செலுத்தினால் தாங்கள் விரும்பும் மதுபானம் வீடு தேடி வரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்கு டெலிவரி கட்டணமாக 50 விழுக்காடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குடிபெயர் தொழிலாளர்களை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்குதான் உள்ளது - பொருளாதார நிபுணர் ஜேன் ட்ரூஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.