ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் உள்ள மோகனா பகுதியில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வாகனத்தில் 391 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் வாகனத்தில் வந்த இருவரைக் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் கஞ்சாவை உதயகிரியிலிருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசிக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுருப்பதும், அதன்மதிப்பு ரூ.30 லட்சம் என்பதும் தெரிய வந்தது. மேலும் கடந்த மாதம் மட்டும் கஜபதி மாவட்டத்தில் 1,056 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் 1 ஏக்கருக்கு கஞ்சா செடி... தீயில் இரையாக்கிய வனத்துறை!