புதுச்சேரியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகச் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இத்தருணத்தில் நேற்று புதுச்சேரி அண்ணா சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அலுவலர்களும், நகராட்சி நிர்வாகத்தினரும் ஈடுபட்டனர்.
குபேர் பஜார் பகுதியில் கடையின் விளம்பரத் தட்டிகள், பலகைகள் ஆகியன பொக்லைன் இயந்திரத்தின் துணையுடன் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஒரு சில வியாபாரிகளுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைப் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
'தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என முப்படைகள் உருவாக்கி செயல்படுத்தப்படும்' : பாமக முடிவு!