அகமதாபாத் (குஜராத்): அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலை செய்துகொண்ட செவிலியரின் பெயர் ஷெஃபாலி மெக்வான். குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
இச்சூழலில், கட்டடத்தின் 10ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் இரண்டு நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர். இது குறித்த மேம்பட்ட விசாரணையை காவல் துறை முடுக்கிவிட்டுள்ளது.