திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடிகர் அமிதாப் பச்சன் தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர் பாலசந்தர் 2010ஆம் ஆண்டும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1996ஆம் ஆண்டும் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.