ETV Bharat / bharat

#370 #kashmir காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்படுமா? - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து

டெல்லி: காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய ஒன்றியமும் ஜம்மு-காஷ்மீர் அரசும் பிரமாணப் பத்திரம்  தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jammu kashmir
author img

By

Published : Sep 16, 2019, 2:32 PM IST

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவும் காஷ்மீர் மக்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ளவும் முயற்சித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலருக்கும் காஷ்மீருக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

காஷ்மீரில் இயல்நிலை திரும்பிவிட்டதாகவும், மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தொலைதொடர்பு வசதிகள் இயங்கி வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காஷ்மீர் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காஷ்மீர் இயல்புநிலை திரும்பிவிட்டதை உறுதிப்படுத்தவும் அதே சமயம் மாநில பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இது தொடர்பாக மத்திய அரசும், ஜம்மு-காஷ்மீர் அரசும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Intro:Body:

https://www.ndtv.com/kerala-news/350-families-cling-on-to-posh-homes-in-keralas-kochi-as-demolition-deadline-ends-2101188

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.