அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் குடியேறியவர்களை அடையாளம் காணும் விதமாக அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3.11 கோடி மக்களின் பெயர்கள் இந்த பதிவேட்டில் இடம்பெற்றுள்ள நிலையில், 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் இவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அஸ்ஸாம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.