புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் நேற்று மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இன்று என்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி பாஜக தலைவர் சாமிநாதனை பாஜக அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கோரினர்.
இதனைத் தொடர்ந்து மாலை புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகம் சென்ற அவர், அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அதிமுக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன், கூட்டணி கட்சி வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும், இந்த இடைத்தேர்தல் மூலம் காங்கிரஸ் அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார். கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து முழு பங்களிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், கூட்டணி கட்சி வேட்பாளர் புவனேஸ்வரன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். மேலும், ரங்கசாமி நிர்வாகிகளை சந்தித்து முறைப்படி ஆதரவு கோரினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில செயலாளர் புருஷோத்தமன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஸ்கரன், என்ஆர் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ். ஜெயபால் ஆகியோரும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
காமராஜர் நகர் இடைத்தேர்தல் - 11 முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு!